news blogger news blogger Author
Title: java tea-பூனை மீசைமூலிகை
Author: news blogger
Rating 5 of 5 Des:
பூனைமீசை இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அர...
பூனைமீசை
இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

பூனை மீசைஇது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.

சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும்  காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை  நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு  குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது 

About Author

Advertisement

Post a Comment

 
Top