news blogger news blogger Author
Title: இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க உதவும் மந்திரம்..!!
Author: news blogger
Rating 5 of 5 Des:
இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது. இம்மந்திர ஜெபத்தின் பயனாக நமக்கு விருப்பமான தேவதைய...



144
இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது.
இம்மந்திர ஜெபத்தின் பயனாக நமக்கு விருப்பமான தேவதையின் ( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்) தரிசனம் கனவில் கிடைக்கும்.சில நாட்களில் அந்த தெய்வத்தோடு பேசி நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.மேலும் உறங்கும் முன் ஏதேனும் ஒன்றை கனவில் காண வேண்டுமென்றால் ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு இன்ன காரியம் அறியவேண்டும் என்று சங்கல்பம் செய்து 108 தடவை மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால் வேண்டியது கனவில் வெளிப்படும்.
சனிக்கிழமை காலை அல்லது இரவில் ஆரம்பிக்கலாம்.ஸ்வப்நேச்வரி தேவியின் படத்தை பிரேம் செய்து முன்னால் வைத்துக் கொள்ளவும். வீட்டை அல்லது பூஜை அறையை பச்சைக் கற்பூரம் கலந்த நீரால் சுத்தம் செய்யவும்.பின்னர் நெய் விளக்கேற்றி பூக்களால் விளக்கை அர்ச்சனை செய்து ,சாம்பிராணி,குங்கிலியம் போட்டு கற்பூரஆரத்தி காட்டவும்.வெள்ளை விரிப்பு விரித்துக் கிழக்கு முகமாக அமரவும்.தினமும் குறிப்பிட்ட ஒரே எண்ணிகையில் ஜெபம் செய்து 45 முதல் 90 நாட்களுக்குள் 51000 உரு மந்திரம் ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகும்.
(45 நாட்கள் என்றால் 44 நாட்களுக்கு 1133 எண்ணிக்கையும் 45 வது நாள் 1148 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும்.)
(90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு 566 எண்ணிக்கையும் 90 வது நாள் 626 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும்.)
மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||

About Author

Advertisement

Post a Comment

 
Top